Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

நைட் சாப்பிடாமா தூங்குனா வெயிட் குறையுமா? உண்மையை தெரிஞ்சுக்கோங்க…

A
Admin User
Journalist
January 30, 2023 1 min read 40 views
நைட் சாப்பிடாமா தூங்குனா வெயிட் குறையுமா? உண்மையை தெரிஞ்சுக்கோங்க…

Skipping dinner lead to Weight gain instead of weight loss: உடல் எடை அதிகரிப்பு என்பது பலரும் இன்றைய காலத்தில் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று. அதிலும், உடல் எடை குறைப்பிற்கு பல்வேறு விதமான டயட் முறைகளை பின்பற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒருவர் தங்களுக்கு பிடிக்காத உணவை சாப்பிடுவது அல்லது உணவை சாப்பிடாமல் இருப்பது எந்த வகையிலும் புத்திசாலித்தனம் அல்ல.

தொப்பை மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க பலரும் சாப்பிடாமல் இருப்பது கெட்ட பழக்கம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதிலும், உடல் எடை குறைப்பிற்கு பலரும் இரவு நேரத்தில் பட்டினி கிடப்பதை ஃபேஷனாக கருதுகிறார்கள். இரவில் சாப்பிடாமல் தூங்குவது ஆரோக்கியமானதா என்ற கேள்விக்கு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் அளித்த பதிலை இப்போது பார்க்கலாம்…

உடல் எடை குறைக்க இரவு உணவைத் தவிர்க்கலாமா?

உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறுகையில், உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடை குறைப்புக்கு, ஆரோக்கியமான காலை உணவு மற்றும் லேசான இரவு உணவை சாப்பிட வேண்டியது அவசியம். ஆனால், இரவு உணவைத் தவிர்ப்பது உடல் எடை குறைக்க உதவும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், அது தவறான புரிதல். இவ்வாறு செய்வதன் மூலம் எடை குறைவதற்குப் பதிலாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரவு உணவைத் தவிர்ப்பதன் பக்க விளைவுகள்

எவரொருவர் இரவில் சாப்பிடாமல் தூங்குகிறாரோ, அவரது உடலில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும். இரவு நேரத்தில் பட்டினி கிடப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இது எரிச்சலை ஏற்படுத்தும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இரவு உணவைத் தவிர்ப்பதன் மற்றொரு பெரிய தீமை என்னவென்றால், அது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கிறது. இது எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் அல்லது உடல் எடை குறைப்பதை கடினமாக்கும்.

அதுமட்டுமின்றி, இரவில் உணவு உண்ணாமல் இருப்பது மூளையின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். இதன் காரணமாக நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

குறிப்பு - இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பும், மருத்துவ நிபுணரை அணுகவும்.

உடலில் சேரும் அதிகமான கொழுப்பைக் கட்டுப்படுத்த இத ட்ரை பண்ணுங்க!

மாதவிடாய் வலியை 10 நிமிடத்தில் போக்கிடும் அற்புத கை வைத்தியம்!!!

உடல் எடை குறைக்கனும்னா மதியம் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…

DSC Lava Kashmir Willow Short Handle Cricket Bat, Size - Mens
Recommended for You
DSC Lava Kashmir Willow Short Handle Cricket Bat, Size - Mens

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,556
தங்கம் (24k)
1 கிராம்
₹15,879
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க